சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16 ஆம் தேதி நடைதிறப்பு!

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16 ஆம் தேதி நடைதிறப்பு!

ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு மகர பூஜை மற்றும் மண்டல விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்படும்.

ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு மகர பூஜை மற்றும் மண்டல விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்படும்.

சபரிமலை

கார்த்திகை பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதியும், ஜனவரி 15-ந் தேதி மகர விளக்குப் பூஜையும் நடைபெறவிருப்பதால் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் பத்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து வந்து ஐயப்பனைத் தரிசிப்பர். ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறப்புப் பூஜைகளைக் காணப் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்குத் திரள்வர். 

சபரிமலை

அதே போல இந்த ஆண்டும் மகர மற்றும் மண்டல பூஜையையொட்டி வரும் நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்ட பின்னர், 17ம் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். நடப்பாண்டில் , பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம் என்று நீதிமன்றம் உத்தர விட்டுள்ளதால் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க 2 ஆயிரம் போலீசார் அங்குக் குவிக்கப்பட உள்ளனர்.

சபரிமலை

பக்தர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்குச் சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு சிறப்புப் பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.