சபரிமலை ஐயப்பன் கோயில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு வருகின்ற 16-ம் தேதி நடை திறப்பு!

 

சபரிமலை ஐயப்பன் கோயில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு வருகின்ற 16-ம் தேதி நடை திறப்பு!

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின் போதும் பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம்.

 

அதனை முன்னிட்டு வருகின்ற 16 ஆம் தேதி புரட்டாசி மாதம் துவங்குவதால் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலில்.கனமழை காரணமாக  கடந்த மாதம் சபரிமலையில் வெள்ளம் சூழ்ந்தது. 

 

 

சபரிமலையின் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த திரிவேணி பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. அதனால், அந்த இடத்தில் தற்காலிகப் பாலம் கோயில் நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகில் உள்ள இடங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. அந்த இடங்களும் கோயில் நிர்வாகத்தின் சார்பாக அவசரமாகச் சரிசெய்யப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், வருகின்ற 16-ம் தேதி மலையாள மாதமான கன்னி மாதம் தொடங்குகிறது. அதனால், வழக்கமான நடைமுறைப்படி சிறப்பு பூஜைகளை மேற்கொள்வதற்காக,  ஐயப்பன் கோயிலின் நடை 16-ம் தேதி  திறக்கப்படுகிறது. 

 

 

அன்று மாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு, கோயிலின் தலைமைத் தந்திரி கண்டராரு ராஜீவரு கன்னிமாச பூஜைகளை நடத்துகிறார். மறுநாள் முதல், தந்திரிகள் பங்கேற்று ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம், உதயஸ்தமனா பூஜை, படிபூஜை, கலபாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளை நடத்துவார்கள். 

 

அதைத் தொடர்ந்து, 21-ம் தேதி கோயிலின் நடை சாத்தப்படும். தற்போது மழைபெய்து சாலைகள் அனைத்தும் மோசமான நிலச்சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பக்தர்கள் அனைவரும் வாகனப் பயணத்தின்போது பாதுகாப்பான முறையில் பயணம்செய்து வருமாறு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.