சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 41 நாள் கடும்விரதம் இருந்து இருமுடி சுமந்துவரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு அனுமதியில்லை.

நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பாலினச்சமத்துவத்துக்கு எதிரானது என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் 8 நாட்கள் விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.