சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

 

சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

சபரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கேரளா: சபரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  தற்போது சபரிமலை மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து  நேற்று இரவுடன் முடிவுக்கு வந்த 144 தடையை நீட்டிக்கக் கேரள காவல்துறையினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே, சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை, கேரள காவல்துறை கண்காணிப்பாளர் அவமதித்தாகக் கூறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.