சபரிமலையில் பெண்ணுரிமை பெயரில் அட்டகாசம்: விரட்டி அடித்த பக்தர்கள்

 

சபரிமலையில் பெண்ணுரிமை பெயரில் அட்டகாசம்: விரட்டி அடித்த பக்தர்கள்

இருமுடி கட்டிக் கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னதிக்குள் நுழைய முயன்ற பெண் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

பத்தனம்திட்டா: இருமுடி கட்டிக் கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னதிக்குள் நுழைய முயன்ற பெண் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த தீர்ப்பிற்குப் பின் முதன்முறையாக கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இம்முறை பெண்களும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பெண்களை உள்ளே அனுமதிக்கத் தடை விதிக்கக் கோரி பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இறங்கினர்.

அந்த போராட்டங்கள் இன்னும் முடிவடையாத பரபரப்பன சூழலில், கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான ரெஹனா பாத்திமா என்ற பெண் இருமுடியுடன் கோயிலுக்குள் செல்ல முயன்றார்.இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், மாடலாகவும், சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பரூக் கல்லூரியில், கடந்த மார்ச் மாதம் பேராசிரியர் ஒருவர் பெண்களின் மார்பகங்களை தர்பூசணியுடன் ஒப்பிட்டுப் பேசினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘எனது உடல், எனது உரிமை’ என்ற கோஷத்துடன், தர்பூசணியுடன் மேலாடை அணியாத தனது அரைநிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதேபோல், கடந்த 2014-ஆம் ஆண்டு KISS OF LOVE என்ற பொது இடங்களில் முத்தமிட்டுக்கொள்ளும் போராட்டத்திலும் ரெஹனா பாத்திமா பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த 2016-இல் திருச்சூரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் புலிகலி நிகழ்ச்சியில், புலி வேடத்தில் பங்கேற்ற முதல் பெண்ணும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சபரிமலை சன்னதியை இன்று காலை நெருங்கிய பாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் என இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்பும்படி கேரள அரசு உத்தரவிட்டதையடுத்து, இருவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.