சபரிமலையில் படி பூஜைக்கு 2036 ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையைக் காண்பதற்காக தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.  சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டதையடுத்து பக்தர்கள் போராட்டங்களை சென்ற ஆண்டு நடத்தியதால், சென்ற வருடம் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்தது.

sabaraimalai

ஆனால் இந்த ஆண்டு அப்படி பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறாததால் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகரித்து வருகின்றது.  சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைப்பெற்று வரும் பூஜைகளில் 18-ம் படி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சபரிமலையில் படிபூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.75 ஆயிரம் ரூபாய்  கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த படிபூஜைக்கான முன்பதிவு வரும் 2036-ம் ஆண்டு வரை படி முன்பதிவுகள் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.