சபரிமலையில் நாளை தரிசனம் கிடையாது! பயணத்தை திட்டமிடுங்க!

சபரிமலையில் நாளை தரிசனம் கிடையாது! பயணத்தை திட்டமிடுங்க!

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, சபரிமலையில், மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலையில் திரளான பக்தர்கள் மாலையணிந்து இருமுடிக் கட்டி குவிந்து வருகிறார்கள்.

sabarimalai

இந்நிலையில், நாளை டிசம்பர் 26ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வதால், நாளை காலை 7.30 மணியிலிருந்து 11.30 மணி வரையில் சபரிமலையில் நடை அடைக்கப்படும் என்று தேவாம்சம் போர்டு அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் பம்பையிலும் கணபதி  உள்ளிட்ட பரிகார தெய்வங்களின் சன்னதிகளும் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சூரிய கிரகண காலத்தின் முடிவில் பரிகார பூஜைகள் செய்த பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு, வழக்கம் போல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும் என்று தேவாம்சம் போர்டு தெரிவித்துள்ளது.