சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் எண்ணிக்கை இவ்வளவா? : கேரள அரசு அதிரடி அறிக்கை!

 

சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் எண்ணிக்கை இவ்வளவா? : கேரள அரசு அதிரடி அறிக்கை!

சபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் செய்திருப்பதாகக் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கேரளா: சபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் செய்திருப்பதாகக் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியிருந்தாலும், கோயிலுக்குள் இளம்பெண்கள் செல்வதற்கு இந்து அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் கடந்த 2-ம் தேதியன்று போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயில்லுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினர்.இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவரும் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர், பாஜகவினர் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

women

இந்நிலையில் கனகதுர்கா மலப்புரம், பெரிந்தலமன்னாவில் உள்ள தனது கணவரின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றார். அப்போது சபரிமலை சென்றது தொடர்பாக கனகதுர்காவுக்கும், அவர் மாமியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கனகதுர்காவை அவரது மாமியார் சுமதியம்மா மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் சுமதியம்மா மீது பெரிந்தல்மன்னா போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

sabarimalasabari

இதனையடுத்து கனகதுர்காவும் பிந்துவும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் 24 மணி நேர பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சபரிமலையில் 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட 51 பெண்கள் இதுவரை சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேளர அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. இதில்  24 பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கனகதுர்கா மற்றும் பிந்துவிற்கு போதிய பாதுகாப்பு வழங்க கேரள போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.