சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முயன்ற ரெஹ்னா பாத்திமாவை பணி நீக்கம் செய்த பி.எஸ்.என்.எல்.

 

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முயன்ற ரெஹ்னா பாத்திமாவை பணி நீக்கம் செய்த பி.எஸ்.என்.எல்.

சபரிமலைக்கு தனது தோழிகளுடன் சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய முயன்ற ரெஹ்னா பாத்திமாவை பி.எஸ்.என்.எல். நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக அவரை பணி நீக்கம் செய்துள்ளதாக பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹ்னா பாத்திமா. மாடலிங்கில் அதிக ஆர்வர் கொண்டவர் மற்றும் இடதுசாரி ஆர்வலர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பாத்திமா டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். கடந்த 2018ல் ரெஹ்னா பாத்திமா தனது தோழிகளுடன் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய முயன்றார். ஆனால் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் ரெஹ்னா பாத்திமாவை பாதி வழியிலேயே திருப்பி அனுப்பினர்.

ரெஹ்னா பாத்திமா சபரிமலை சென்ற போது

சமூக வலைதளங்களில் அய்யப்ப பக்தர்களையும், சபரிமலை தொடர்பாக மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் ரெஹ்னா பாத்திமாவை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர். மக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டில் பாத்திமாவை பத்தனம்திட்டா போலீசார் கைது செய்ததையடுத்து அவரை பி.எஸ்.என்.எல். அவரை பணி இடை நீக்கம் செய்தது.

பி.எஸ்.என்.எல்.

இந்நிலையில், பி.எஸ்.என்.எல். நிர்வாகத்துக்கு, ரெஹ்னா பாத்திமாவின் படங்கள் மற்றும் வீடியோக்கம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்தது. இதனையடுத்து தற்போது ரெஹ்னா பாத்திமாவை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.