சபரிமலையில் கலவரம்: இலங்கைப் பெண் 18-ம் படி அருகில் தடுத்து நிறுத்தம்!

 

சபரிமலையில் கலவரம்: இலங்கைப் பெண் 18-ம் படி அருகில் தடுத்து நிறுத்தம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு பெண்கள் நுழைந்ததைக் கண்டித்து கேரளாவில் கலவரம் வெடித்து வரும் நிலையில்,  நேற்று இலங்கையைச் சேர்ந்த பெண் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கேரளா : சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு பெண்கள் நுழைந்ததைக் கண்டித்து கேரளாவில் கலவரம் வெடித்து வரும் நிலையில்,  நேற்று இலங்கையைச் சேர்ந்த பெண் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுக்கும்  குறைவான பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் நேற்று முன்தினம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலின்  ஐதீகமும்,  புனித தன்மையும் கெட்டு போய் விட்டதாக கூறி கேரளாவில் கலவரம் வெடித்துள்ளது.

sabarimala

இந்நிலையில், நேற்று இரவில் இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்த சசிகலா என்பவர் 18-ம் படி வழியாகச் சென்று சுமார் 9.30 மணியளவில் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்ததாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், 18-ம் படி அருகில் அவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் சாமி தரிசனம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

’48 நாட்கள் விரதம் இருந்தே இங்கு வந்துள்ளேன். போலீசார் என்னை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை’ என்று சசிகலா ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மீண்டும் 50 வயதுக்கும்  குறைவான பெண் ஒருவர் சாமி தரிசனம் செய்ய முற்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.