சபரிமலையில் இதுவரை மூன்று மலேசிய பெண்கள் உள்பட 10 பெண்கள் சாமி தரிசனம்!

 

சபரிமலையில் இதுவரை மூன்று மலேசிய பெண்கள் உள்பட 10 பெண்கள் சாமி தரிசனம்!

மலேசிய நாட்டைச் சேர்ந்த மூன்று தமிழ் பெண்கள் ஜனவரி 1 ஆம் தேதி சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ததாகக் கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். 

கேரளா: மலேசிய நாட்டைச் சேர்ந்த மூன்று தமிழ் பெண்கள் ஜனவரி 1 ஆம் தேதி சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ததாகக் கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. அப்போது, பிந்து, கனகதுர்கா ஆகிய 50 வயதிற்குட்பட்ட இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு திரும்பினர்.

kerala

இதனால் கேரளா முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள அரசைக் கண்டித்து இந்து அமைப்பினர், பாஜக-வினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை தாண்டவமாடியது. கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்தனர். சாலையில் டயர்களை எரித்தனர். இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளா மாநிலம் போர்க்களமாக காட்சியளிக்கிறது.

women

இந்நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி மூன்று மலேசிய பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யயதாக போலீசார்  தெரிவித்துள்ளனர். ஜனவரி 1 ஆம் தேதி காலை சாமி தரிசனம் செய்த அந்த மூன்று பெண்களும் சாமி தரிசனம் செய்துவிட்டு பம்பாவுக்கு காலை 10 மணியளவில் திரும்பிவிட்டதாகவும் கூறுகின்றனர். இவர்களுக்கு போலீசார் யாரும் பாதுகாப்பு அளிக்கவில்லை. அவர்களே வந்து திரும்பினர். ஆனால் அவர்களின் வயது விவரங்களைக் கேரள போலீசார்  தெரிவிக்கவில்லை