சபரிமலையில் அடுத்த பரபரப்பு ஆரம்பம்… கிலோ கணக்கில் தங்கம் மாயம் !?

 

சபரிமலையில் அடுத்த பரபரப்பு ஆரம்பம்… கிலோ கணக்கில் தங்கம் மாயம் !?

கடவுளுக்கு கணக்கு பார்க்க நேரமிருக்காது என்கிற தைரியத்தில் அவன் சொத்தை அடித்தடுத்து ஆட்டையை போடுகிறார்கள்.திருச்செந்தூர், திருப்பதி,மைலாப்பூரைத் தொடர்ந்து இப்போது சபரிமலையில் கிலோ கணக்கில் தங்கம்,வெள்ளி மிஸ்ஸிங் என்று புகார் கிளம்பி இருக்கிறது.

கடவுளுக்கு கணக்கு பார்க்க நேரமிருக்காது என்கிற தைரியத்தில் அவன் சொத்தை அடித்தடுத்து ஆட்டையை போடுகிறார்கள்.திருச்செந்தூர், திருப்பதி,மைலாப்பூரைத் தொடர்ந்து இப்போது சபரிமலையில் கிலோ கணக்கில் தங்கம்,வெள்ளி மிஸ்ஸிங் என்று புகார் கிளம்பி இருக்கிறது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தரும் காணிக்கைகளில் பணத்தை தவிர தங்கம்,வெள்ளி மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை, ஆபரணங்களை கோவிலின் அருகிலுள்ள தேவசம்போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். இதற்கு மூன்று அதிகாரிகள் பொறுப்பு வகிக்கிறார்கள்.பொருட்களை வைக்கும் போதும் எடுக்கும்போதும் இந்த மூன்று பேரும் இருக்க வேண்டும் என்பது ,திருவிதாங்கூர் தேவசம் போர்டு விதி.

sabarimalai temple

வருடந்தோறும் இந்த அறையிலுள்ள பொருட்கள் தணிக்கை செய்யப்படும். இங்கு தங்கம் ,வெள்ளி ,மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போவதாக புகார் வந்ததை அடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பாதுகாப்பு பெட்டகத்தின் கணக்கு,வழக்குகள் சரியாக பராமரிக்கப்பட்வில்லை என்று தெரிய வந்தது.

இதுபற்றி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கேரள உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.அதை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம் ஆபரணங்கள்  பாதுகாப்பு அறையிலுள்ள தங்கம்,வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பொருட்களை தணிக்கை செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது. 

sabarimalai temple

இதனால்,நாளையே தேவசம்போர்டு தணிக்கை அதிகாரிகள் களமிறங்கப் போகிறார்கள்.புதுப்புது பூதங்கள் கிளம்பலாம் என்று மக்களும்,
“இது சிலரின் திட்டமிட்ட சதி,தவறு கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரும், 2017 முதல் பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்ட 40 கிலோ தங்கம்,100 கிலோ வெள்ளி காணாமல் போனது அதிர்ச்சி அளிக்கிறது என்று ,பிஜேபியின் கேரள மாநில பொதுச்செயலாளர் கே.சுரேந்திரனும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.