சபரிமலைக்கு மேலும் 2 பெண்கள்! நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம்!

சபரிமலைக்கு மேலும் 2 பெண்கள்! நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம்!

கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதையடுத்து சபரிமலையில் பக்தர்களின் தரிசனத்திற்காக தற்போது நடை திறக்கப்பட்டுள்ளது. இந்த பூஜை காலங்களில் வழக்கமாக சபரிமலையில் தரிசனத்திற்காக 10 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியிருந்தாலும் இந்த வயதில் தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று தேவசம் போர்டு தெரிவித்து விட்டது. 

sabarimalai

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைப்பெற்று வருவதால் சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். இதற்காக சபரிமலைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மீறி வரும் பெண்களை பம்பை அருகிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தற்போது மேலும் இரண்டு பெண்கள் நேற்று மாலை சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். பின்னர் அவர்கள் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 
சபரிமலைப் பகுதிகளிலும், பம்பையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இளம்பெண்கள் வருகிறார்களா என்பதை கண்காணிக்கவும், மீறி வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தவும் தேவசம்போர்டு ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.