சபரிமலைக்கு பதில் சென்னை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

 

சபரிமலைக்கு பதில் சென்னை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தென்இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதுவரை கேரளாவில் 22 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தென்இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதுவரை கேரளாவில் 22 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சபரிமலை அய்யப்பன் கோயில் மாதந்திர பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சபரிமலைக்கு வருவதை தவிர்க்கும்படி திருவாங்கூர் தேவஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்தது. 

sabarimala

இந்நிலையில் சபரிமலை தேவசம் போர்டின் அறிவிப்பையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் தங்களது கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் விரதத்தை முடித்து 18 படி ஏறி சாமி தரிசனம் செய்தனர்.