சபரிமலைக்கு செல்ல முயன்ற 10 பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தம்!

 

சபரிமலைக்கு செல்ல முயன்ற 10 பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தம்!

சபரிமலைக்குச் சென்றுள்ள ஐயப்ப  பக்தர்களுக்கு சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

சபரிமலை ஐயப்பன் கோயில்  இன்று மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படவுள்ளது. இதனால் சபரிமலைக்குச் சென்றுள்ள ஐயப்ப  பக்தர்களுக்கு சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

sabari

மேலும்  பெண்கள் பலர் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா? ஒருவேளை அனுமதித்தால் கடந்த ஆண்டு போல பிரச்சனை வெடிக்குமா என்று தேவசம் போர்டு சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

sabari

அதில்,  சபரிமலைக்கு வரும் பெண்களிடம் பிரச்னைகளை எடுத்துச்சொல்லித் திருப்பி அனுப்பி விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் கேரள அமைச்சர் சுரேந்திரன், ‘சபரிமலைக்கு வரும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு தரமுடியாது என்று தெரிவித்திருந்தார். 

sabari

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து சபரிமலை சென்ற 10 பெண்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  பம்பையிலேயே  வழிமறிக்கப்பட்ட அவர்களுக்கு பிரச்னைகளை எடுத்துச்சொல்லித் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.