சன் மியூஸிக்கிலிருந்து வெளியேறி பிரபல முன்னணி தொலைக்காட்சியில் இணைந்த அஞ்சனா

 

சன் மியூஸிக்கிலிருந்து வெளியேறி பிரபல முன்னணி தொலைக்காட்சியில் இணைந்த அஞ்சனா

சன் மியூசிக் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறி அஞ்சனா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்ற உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை: சன் மியூசிக் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறி அஞ்சனா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்ற உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக நீண்ட வருடங்கள் பணி புரிந்து பிரபலமானவர் அஞ்சனா. அதையடுத்து நடிகர் கயல் சந்திரனை காதலித்து கரம் பிடித்தார்.இதனால் சின்னதிரையை விட்டு விலகியிருந்த அஞ்சனாவை அவரது ரசிகர்கள் மிஸ் செய்ததாக பதிவு வெளியிட்டு வந்தனர். 

anjana

இந்நிலையில் சன் மியூஸிக்கில் இருந்து விடைபெற்று  ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மாறியுள்ளார் அஞ்சனா. இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘விஜேவாக எனது 10 ஆண்டு பயணத்தில், என்னை ஆளாக்கிய சன் நெட்வொர்க்கிற்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். திரையிலும், திரைக்கு வெளியிலும் அதுதான் என்னை உறுதியான நபராக உருவாக்கியிருக்கிறது.

நான் எடுத்துக் கொண்ட நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இப்போது ஜீ தமிழில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3’ நிகழ்ச்சியில் நாளை முதல் என்னைக் காணலாம். உங்கள் அனைவரின் அன்பும் அரவணைப்பும் தேவை’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவிற்கு அஞ்சனாவின் கணவரும் நடிகருமான சந்திரன், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள அஞ்சனா, ‘நீங்கள்தான் எனது எல்லா சந்தேகங்களையும் தீர்த்து, நான் முன்னேறிச் செல்ல உந்துதலாக இருந்தீர்கள். மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியுமா? என்று என் மீதே நான் சந்தேகம் கொண்டபோது, உந்துதலாக இருந்தீர்கள். நன்றி. செட்டில் ஆக கொஞ்ச நாள் ஆகும். ஆனாலும் ஒருநாள் என்னால் நீங்கள் பெருமைப்படுவீர்கள்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.