சன் தொலைக்காட்சிக்கு டாடா காண்பித்து விட்டு, மற்றொரு தொலைக்காட்சிக்கு ஹாய் சொல்லிய ராதிகா?

 

சன் தொலைக்காட்சிக்கு டாடா காண்பித்து விட்டு, மற்றொரு தொலைக்காட்சிக்கு ஹாய் சொல்லிய ராதிகா?

நடிகை ராதிகா சன் தொலைக்காட்சியில் இருந்து மற்றொரு தொலைக்காட்சிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை ராதிகா சன் தொலைக்காட்சியில் இருந்து மற்றொரு தொலைக்காட்சிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சின்னதிரை, வெள்ளித்திரை என்று அனைத்திலும் ஆல் ரவுண்டராக வலம் வருபவர் நடிகை ராதிகா. வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருந்தாலும் சின்னதிரை மூலமே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உருவாகினார்கள். அதுவும், இவருக்கு சன் தொலைக்காட்சிக்கு இருக்கும் உறவு என்பது பூமிக்கும், சூரியனுக்கு இடையே இருக்கும் உறவு போன்றது.  

radhika sarathkumar

சன் தொலைக்காட்சியில் கடந்த 1999 ஆண்டு தொடங்கிய இவரின் பயணம் இந்த ஆண்டு வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் தற்போது ராதிகாவின் ஸ்லாட் திடீரென்று மாற்றி அமைக்கப்பட்டதால் இவர்களுக்கு இடையே சிறிய பிரச்சினை ஏற்பட்டு சந்திரகுமாரி தொடரிலிருந்து அதிரடியாகவெளியேறி தாக கூறப்பட்டுள்ளது. 

rd

இந்த நிலையில் தற்போது ஓய்வில் இருக்கும் ராதிகா, மீண்டும் சீரியலில் களமிறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை சன் தொலைக்காட்சி இல்லையாம் அதற்குப் பதில் ஜி தொலைக்காட்சியில் இனையப் போகிறாராம்… ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.