சன் டிவியில் ‘96’ பட ப்ரீமியர்: த்ரிஷா வேண்டுகோள்!

 

சன் டிவியில் ‘96’ பட ப்ரீமியர்: த்ரிஷா வேண்டுகோள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் ‘96’ திரைப்படத்தை ஒளிபரப்புவதை தள்ளி வைக்குமாறு நடிகை த்ரிஷா வேண்டுகோள் வைத்துள்ளார்.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் ‘96’ திரைப்படத்தை ஒளிபரப்புவதை தள்ளி வைக்குமாறு நடிகை த்ரிஷா வேண்டுகோள் வைத்துள்ளார்.

விஜய் சேதுபதி –த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘96’ திரைப்படம் 5வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடைப் போடுகிறது. இந்நிலையில், இந்திய தொலைக்காட்சி வரலற்றில் முதன் முறையாக திரைக்கு வந்து சில வாரங்களே ஆன ’96’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்கு ‘96’ ரசிகர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில், நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அவரது டீவிட்டில் 5 வாரமாக வெற்றிநடைப்போடும் ‘96’ படத்தை இவ்வளவு சீக்கிரமாக சன் டிவியில் ஒளிபரப்புவதை ஏற்க முடியவில்லை. எனது குழு சார்பாக ‘96’ ப்ரீமியரை பொங்கல் பண்டிகைக்கு ஒத்தி வைக்குமாறு சன் டிவியிடம் கேட்டுக் கொள்கிறேன்’ என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

காதலர்கள் கொண்டாடி வரும் காதல் காவியமான ‘96’ திரைப்படம் விமசர்னம் மற்றும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், கொஞ்ச நாள் கழித்து டிவியில் போடலாமே என்ற கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. எனினும், த்ரிஷா மற்றும் 96 படக் குழுவினரின் கோரிக்கையை சன் டிவி ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.