சன்னி லியோனை கழுவி கழுவி ஊற்றும் சேட்டன்கள்!

 

சன்னி லியோனை கழுவி கழுவி ஊற்றும் சேட்டன்கள்!

சன்னி லியோன் மம்மூட்டி பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்து சேட்டன்கள் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர்.

திருவனந்தபுரம்: சன்னி லியோன் மம்மூட்டி பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்து சேட்டன்கள் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர்.

sunny

விசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படம் மதுர ராஜா. அந்த படத்தில் மம்மூட்டியின் தம்பியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெய். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் சன்னி லியோன். இது தான் சன்னி லியோனின் முதல் மலையாள படமாகும். இதையடுத்து அவர் ரங்கீலா என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். 

sunny leone

சன்னி லியோன் மம்மூட்டி அருகே அமர்ந்திருக்கும் புகைப்படத்தை நடிகர் அஜு வர்கீஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இக்காவுடன் அக்கா என்று அவர் அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டிருந்தார். இக்கா என்றால் சகோதரர் என்று அர்த்தம். மம்மூட்டி சன்னி, மம்மூட்டியின் புகைப்படத்தை அஜு வெளியிட்டதை பார்த்த நெட்டிசன்கள் அசிங்கம் அசிங்கமாக கமெண்ட் போட்டனர். சன்னி மற்றும் மம்மூட்டியை கண்டமேனிக்கு கலாய்த்து மீம்ஸ் போட்டனர். 

sunny

தான் போட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்ததை பார்த்த அஜு வர்கீஸ் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார். ஆனால் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை நீக்கவில்லை. சன்னி லியோனை சன்னி சேச்சி என்று கொண்டாடும் சேட்டன்கள் இப்படி கலாய்த்தது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. ஸ்தம்பித்தது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சன்னி லியோன் கொச்சி வந்தபோது அவரை பார்க்க சேட்டன்கள் முந்தியடித்ததில் நகரே ஸ்தம்பித்து போனது. இந்நிலையில் சன்னி சேச்சியை சேட்டன்கள் கலாய்த்துள்ளனர்.