சந்தேகத்துக்குரியவர்கள் அனைவருக்கும் கொரோனா ரேப்பிட் டெஸ்ட்! – புதுச்சேரி முடிவு

சந்தேகத்துக்குரியவர்கள் அனைவருக்கும் கொரோனா ரேப்பிட் டெஸ்ட்! – புதுச்சேரி முடிவு

புதுச்சேரியில் கொரோனாவால் ஏழு பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் குணமாகி வீடு திரும்பியதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா கண்டறிதல் சோதனையை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் சந்தேகத்துக்குரிய அனைவருக்கும் கொரோனா ரேப்பிட் டெஸ்ட் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரியில் கொரோனாவால் ஏழு பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் குணமாகி வீடு திரும்பியதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா கண்டறிதல் சோதனையை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

corona-in--puducherry

இதுவரை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள, சந்தேகத்துக்குரிய நபர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த சோதனை இன்று தொடங்கப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
இதுவரை வீடு வீடாக சென்று கொரோனா தொற்றுக்கு வாய்ப்புள்ளவர்கள் பற்றிய விவரத்தை அம்மாநில அரசு சேகரித்துள்ளது. 9 லட்சத்து 75 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று முதல் ரேப்பிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் புதுச்சேரியும் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறும் என்று அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.