சந்திர கிரகணத்தை குழந்தைகளுடன் எப்படி பார்த்து ரசிக்கலாம்?

சந்திர கிரகணத்தை குழந்தைகளுடன் எப்படி பார்த்து ரசிக்கலாம்?

இந்த வருடத்தின் கடைசி சந்திரகிரகணம் இன்று இரவு துவங்கி நாளை அதிகாலை வரை நடைபெற இருக்கிறது. இந்த சந்திர கிரகணத்தை நீங்கள் வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம். மறக்காமல் உங்கள் குழந்தைகளுக்கும் இந்த குதூகலத்தை அனுபவிக்க கற்றுத் தாருங்கள். நீங்கள் எப்படி இந்த சந்திரகிரகணத்தை வெறும் கண்களால்  உங்கள் குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கலாம் என்பதை டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.

solar eclipse

எப்படி வெறும் கண்களால் பார்க்கலாம் என்பதற்கு முன்னால், சந்திரகிரகணம் என்றால் என்ன என்கிற தெளிவை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் போது தான் கிரகணங்கள் உ ருவாகின்றன. அப்படி ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது.

solar eclipse

இன்று நள்ளிரவு சரியாக 12:12 மணிக்கு துவங்கும் இந்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை 01:31 மணிக்கு உச்சம் பெறும் என்றும், அதிகாலை 4 மணி 29 நிமிடத்திற்கு கிரகணம் முழுமை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நிகழவிருக்கும் சந்திரகிரகணத்தை பகுதி நேர சந்திர கிரகணம் என்கிறார்கள். அடுத்த முழுமையான சந்திர கிரகணம் 2021ம் ஆண்டு தான் நிகழும்.
நம் இந்தியாவில்… இல்லையில்லை… ஆசியாவில் வசிப்பவர்களால் இந்த சந்திர கிரகணத்தை நன்றாக வெறும் கண்களால் பார்க்க முடியும். உங்கள் குழந்தைகளுக்கு சந்திர கிரகணம் குறித்து சொல்லித் தர இந்த சந்திரகிரகணம் சரியான வாய்ப்பாக இருக்கும். வெறும் கண்களால் இந்த சந்திரகிரகணத்தைப் பார்ப்பதால் எந்த ஆபத்தும் கிடையாது.

solar eclipse

சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இந்த சந்திரகிரகணத்தைப் பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  பைனாகுலர், டெலஸ்கோப், அல்லது கேமரா வழியாக பார்ப்பவர்கள் இன்னும் தெளிவாக பார்த்து ரசிக்கலாம். இந்த அழகிய காட்சியை புகைப்படம் எடுக்க விரும்பினால், செட்டிங்ஸில் சென்று வைட் – ஆங்கில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து ரசியுங்கள்.