சந்திராயன் 2 போட்டோக்களை அப்லோட் செய்யுங்கள், பிரதமர் அதனை ரீ-ட்வீட் செய்யக்கூடும்!

 

சந்திராயன் 2 போட்டோக்களை அப்லோட் செய்யுங்கள், பிரதமர் அதனை ரீ-ட்வீட் செய்யக்கூடும்!

இஸ்ரோ விஞ்ஞானிகளின் திறமையை, இந்தியாவும், இதர நாடுகளும் மீண்டும் ஒருமுறை பார்க்கப் போவதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, சந்திரயான் நிலவில் தரை இறங்கும் சிறப்பான தருணத்தை அனைவரும் பார்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரை இறக்கப்படும் வரலாற்றுச் சாதனை நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பார்ப்பதற்காக, பிரதமர் மோடி பெங்களூரு செல்லும் வழியில் ”130 கோடி இந்தியர்களும் ஆர்வத்துடன் காத்திருந்த தருணம் வந்து விட்டதாக” ட்விட்டியுள்ளார். சந்திராயன் 2 தரையிறக்கப்படுவதை பெங்களூருவின் இஸ்ரோ மையத்தில் இருந்து பார்க்கப் போவதை நினைத்து உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளதாக மோடி பதிவிட்டுள்ளார்.

Whole of India awaiting this moment

இஸ்ரோ நடத்திய விண்வெளி சார்ந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பூடான் நாட்டு மாணவர்களும் மோடியுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள். வினாடிவினா போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றது, அறிவியல் மற்றும் விண்வெளி மீதான இளைஞர்களின் ஆர்வத்தை எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அறிகுறி எனவும் மோடி பாராட்டியுள்ளார். சந்திரயான் 2 திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் இந்தியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள மோடி, சிறப்பான தருணத்தை அனைவரும் பார்த்து, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். அவற்றில் சில புகைப்படங்களை தாம் ரீட்வீட் செய்யப் போவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.