சந்திரயான் 2 மிஷன் முயற்சியை பாராட்டிய நாசா…

 

சந்திரயான் 2 மிஷன் முயற்சியை பாராட்டிய நாசா…

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா இஸ்ரோவின் சந்திரயான் 2 முயற்சியை பாராட்டியுள்ளது.

சந்திரயான் 2 நிலவில் இறங்கி சாதனை படைக்கும் என்று 130 இந்தியர்களும் எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் பின்னடைவை சந்தித்தது. சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், இஸ்ரோவின் முயற்சியை நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டினர். பல்வேறு உலக நாடுகளும் பாராட்டின.

நாசாவின் டிவிட்

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவும் இஸ்ரோவின் முயற்சியை பாராட்டியுள்ளது. இது தொடர்பாக நாசா தனது டிவிட்டரில், விண்வெளி கடினமானது. நிலவின் தென் பகுதியில் சந்திரயான் 2 மிஷனை இறக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சியை பாராட்டுகிறோம். உங்களது பயணம் வாயிலாக எங்களுக்கு ஊக்கம் அளித்தீர்கள். சூரிய குடும்பத்தை நாம் சேர்ந்தே ஆய்வு செய்ய எதிர்கால வாய்ப்புகளை எதிர்நோக்குகிறோம் என்று பதிவு செய்து இருந்தது.

இஸ்ரோ

நாசாவின் புள்ளிவிவரத்தின்படி, இதுவரை நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் 60 சதவீதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. 40 சதவீதம் தோல்வி கண்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில் நிலவுக்கு 109 விண்கலன்கன் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 61 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.