சந்திரயான் 2 மிஷன் தோல்வி! திட்ட இயக்குனர் டிரான்ஸ்பர்…. அதிரடி காட்டிய இஸ்ரோ….

 

சந்திரயான் 2 மிஷன் தோல்வி! திட்ட இயக்குனர் டிரான்ஸ்பர்…. அதிரடி காட்டிய இஸ்ரோ….

சந்திரயான் 2 திட்ட இயக்குனர் வனிதாவை வேறு பணியிடத்துக்கு இஸ்ரோ மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் 2வை கடந்த ஜூலையில் விண்ணில் ஏவியது இஸ்ரோ. திட்டமிட்டப்படி, சந்திரயான் 2 தனது பயணத்தை தொடர்ந்தது. முதலில் ஆர்ப்பிட்டரை நிலவின் சுற்று வட்டப்பாதையில் கழற்றி விடப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 7ம் தேதி அதிகாலையில் நிலவில் சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் விக்ரம் லேண்டருடன் உடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சந்திரயான் 2 தோல்வியில் முடிவடைந்தது.

இஸ்ரோ

சந்திரயான் 2 தோல்வி குறித்து இஸ்ரோ தீவிரமாக ஆய்வு செய்து வந்தது. மேலும், சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்த தொடங்கியது. அதேசமயம், சந்திரயான் 2 திட்டத்தில் எந்த இடத்தில் கோட்டையை விட்டோம் என்பது குறித்தும் அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்த விவரங்களை இஸ்ரோ வெளிப்படையாக இதுவரை தெரிவிக்கவில்லை.

வனிதா

இந்நிலையில் சந்திரயான் 2 திட்டத்தின் இயக்குனராக இருந்த வனிதா வேறு பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக பி வீரமுத்துவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. சந்திரயான் 2ன் அனைத்து சிஸ்டம்களுக்கும் வனிதாவின் குழுவுதான் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது லேண்டர்தான் கடந்த செப்டம்பர் 7ம் தேதி நிலவில் திட்டமிட்டப்படி இறங்காமல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.