சந்திரபாபு நாயுடு கட்டிய ‘பிரஜா வேதிகா’ கட்டடம் இடிப்பு: வச்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி!

 

சந்திரபாபு நாயுடு கட்டிய ‘பிரஜா வேதிகா’  கட்டடம் இடிப்பு: வச்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திராவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்  சந்திரபாபு நாயுடு  முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆந்திரா: சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டடத்தை  இடிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

jagan

ஆந்திராவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்  சந்திரபாபு நாயுடு  முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியேறினார். இதையடுத்து அதன் அருகிலேயே, 8 கோடி ரூபாய் செலவில்  பிரஜா வேதிகா என்ற கட்டடம் கட்டப்பட்டு, கட்சி பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

ஆந்திரா

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பிரஜா வேதிகா கட்டடத்தைத் தானே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை  வைத்தார். இதை ஜெகன் மோகன் ரெட்டி நிராகரித்தாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பிரஜா வேதிகா கட்டடத்தில் சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் முதன்முதலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றது. 

 

இந்நிலையில் பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதால்  அதை இடிக்கக்கோரி ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார். அதன்படி பிரஜா வேதிகா கட்டடத்தை இடிக்கும் பணிகள் தற்போது ஆரம்பித்துள்ளது. ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வரும் கட்டடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.