சந்திரனுக்கு பின்னால் மறையும் செவ்வாய் கிரகம் – எப்போ தெரியுமா?

 

சந்திரனுக்கு பின்னால் மறையும் செவ்வாய் கிரகம் – எப்போ தெரியுமா?

சந்திரன் செவ்வாய் கிரகத்தை மறைக்கும் நிகழ்வு வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

டெல்லி: சந்திரன் செவ்வாய் கிரகத்தை மறைக்கும் நிகழ்வு வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் வானம் தெளிவாக இருந்தால், செவ்வாய் கிரகத்தை நேர் எதிராக சந்திரன் கடந்து செல்லும் காட்சியை உங்களால் பார்க்க முடியும். 2020-ஆம் ஆண்டில் சந்திரன் ஐந்து முறை செவ்வாய் கிரகத்தை மறைத்து கடந்து செல்லும். ஆனால் இந்த பிப்ரவரியில் நடக்கும் நிகழ்வை மட்டுமே பார்வையாளர்கள் நன்கு பார்த்து ரசிக்க முடியும். வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பெரும்பாலான பார்வையாளர்கள் இந்தக் காட்சியை கான முடியும்.

ttn

இந்த நிகழ்வைக் காண நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது உங்கள் இடத்தில் வானம் தெளிவாக இருந்தால் மட்டுமே இந்த நிகழ்வை பார்த்து ரசிக்க முடியும். இந்தியாவிலும் இந்த நிகழ்வை குறிப்பிட்ட சில இடங்களில் கண்டு களிக்க முடியும். ஆனால் மேகமூட்டம் இல்லாமலோ, மழை மேகங்கள் இல்லாமலோ அப்போது வானம் தெளிவாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.