சந்திரகுமாரி சீரியலில் இருந்து விலகிய ராதிகா? இனி அவருக்கு பதில் இவர் தான்!

 

சந்திரகுமாரி சீரியலில் இருந்து விலகிய ராதிகா? இனி அவருக்கு பதில் இவர் தான்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சந்திரகுமாரி’ சீரியலில் இருந்து ராதிகா விலகியுள்ளதால் அவருக்கு பதில் விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளார்.

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சந்திரகுமாரி’ சீரியலில் இருந்து ராதிகா விலகியுள்ளதால் அவருக்கு பதில் விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ராதிகா. பின்னர் கடந்த 1999 ஆண்டு சின்னதிரையில் சித்தி  சீரியல் மூலம் அறிமுகமாகி அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி என்று தொடர்ந்து 20 வருடங்களாக வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

chandrakumari

5 ஆண்டுகளுக்கு ராதிகா இரண்டு வேடங்களில் நடித்த வாணி ராணி சீரியல், கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து தனது ரடான் மீடியா தயாரிப்பில் சந்திரகுமாரி சீரியலைத் தயாரித்து வருகிறார். சரித்திரமும் சமூகமும் மாறி மாறிப் பயணிக்கும் இதில் ராதிகா 7 வேடங்களில் நடித்து அசத்திவந்தார்.

viji chandrasekar

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதிகா தான் தொலைக்காட்சியில் நிறைய நடித்துவிட்டதாகவும், எனவே இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்கப் போவதாகவும் அறிவித்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த அவரது ரசிகர்கள் சந்திரகுமாரி சீரியலில் இவருக்கு பதில் யார் நடிப்பார்? என்று கேள்வி எழுப்பிவந்தனர்?

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில்,’ திறமையான விஜியை அன்புடன் வரவேற்கிறேன். இவர் சந்திரகுமாரி கதையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துவார். எனக்கு அளித்த அதே ஆதரவை இவருக்கும் அளிக்க வேண்டுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: ‘‘இந்த பூமியில் வாழ்ந்ததற்கு வாடகையாக தனது படைப்புகளை விட்டுச்சென்றுள்ளார் மகேந்திரன்”-பாரதிராஜா