சந்தியா தலை கிடைக்குமா? வைக்கப்போரில் ஊசியை தேடும் கதை தான்!!

 

சந்தியா தலை கிடைக்குமா? வைக்கப்போரில் ஊசியை தேடும் கதை தான்!!

கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சந்தியாவின் தலை சிக்குமா? சிக்காதா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன

சென்னை: கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சந்தியாவின் தலை சிக்குமா? சிக்காதா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இளம் பெண்ணின் துண்டிக்கப்பட்ட வலது கை மற்றும் 2 கால்கள் தனித் தனியாக கடந்த மாதம் 21-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அப்பெண்ணின் கையில் குத்தப்பட்டிருந்த பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் டாட்டூவை வைத்தும், உடல் பாகங்கள் அழுகாமல் உள்ளதால், பெண்ணின் வலது கைரேகையைக் கொண்டு ஆதார் பதிவு மூலம் அவர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

sandhya

துப்பு கிடைக்காமல் அல்லாடிய போலீசார், ஒருவழியாக அப்பெண் யார் என்பதை தீவிர விசாரணைக்கு பின்னர் கண்டுபிடித்தனர். அப்பெண் சந்தியா என்றும், அவரது கணவரான துணை இயக்குனர் பாலகிருஷ்ணனே அவரை நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், தனது மனைவியை தான் கொலை செய்யவில்லை என கேஷுவலாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால், அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.

sandhya

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனது மனைவியை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக களாக வெட்டி, ஒரு கை மற்றும் தலை, ஒரு கை மற்றும் இரண்டு கால்கள், உடலின் மற்ற பகுதிகள் ஒரு பாகம் என மூன்று பாகங்களாகப் பிரித்து இரண்டு பாகங்களை குப்பைத்தொட்டியிலும், ஒரு பாகத்தை ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு ஆற்றிலும் வீசியதாக கூறப்பட்டது. இதையடுத்து, உடல் பாகங்கள் அடையாறு ஆற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

விடுபட்ட தலையும், ஒரு கையும் பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு சென்றதாக தெரிகிறது. அந்த குப்பைக்கிடங்கை பொறுத்தவரை நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான டன்கள் குப்பை சேகரிக்கப்பட்டு கொட்டப்படுகிறது. இங்கு ஒவ்வொரு மண்டலக் குப்பையையும் தனித்தனியாகக் கொட்டுவார்கள். சந்தியா தலை உள்ள மண்டலம் 10-வது எண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

perungudi

சம்பவம் நடைபெற்று இன்றுடன் 18 நாள்கள் ஆகிறது. இங்கு தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் தலை கிடைப்பது கடினம் என்றே கூறுகின்றனர் மாநகராட்சி அலுவலர்கள்.

பொதுமக்கள் குப்பையைப் பெரிய கவரில் கட்டி தூக்கி போட்டுவிட்டுச் செல்கின்றனர் எனவும், குப்பை லாரிகளும் அதை அப்படியே தொட்டியுடன் கவிழ்த்து சேகரித்து குப்பைக் கிடங்கில் வந்து கொட்டுகின்றன என குறிப்பிட்டு சொல்லும் அவர்கள், போலீசார் கூற்றுப்படி பென்ன்னின் தலை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு குப்பைக் கிடங்குக்கு வந்து சேர்ந்திருந்தால், பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு குப்பை கிளறப்பட்டு தேடப்படும். எனினும், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதால், தலையை கண்டுபிடிப்பது சிரமமே, வைக்கப்போரில் ஊசியை தேடும் கதை தான் இது என்றும் கூறுகின்றனர்.