சந்தியா கொலை வழக்கு: தலையை மூன்று மாதங்களாக தேடும் போலீஸ்: மூட்டையாக கட்டி உடல்பாகங்களை கொடுத்த அவலம்!

 

சந்தியா கொலை வழக்கு: தலையை மூன்று மாதங்களாக தேடும் போலீஸ்: மூட்டையாக கட்டி உடல்பாகங்களை கொடுத்த அவலம்!

பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சந்தியா கொலை வழக்கில், மூன்று மாதங்களுக்கு பிறகு சந்தியாவின் உடல் பாகங்களை போலீசார் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். 

சென்னை: பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சந்தியா கொலை வழக்கில், மூன்று மாதங்களுக்கு பிறகு சந்தியாவின் உடல் பாகங்களை போலீசார் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். 

சந்தியா கொலை வழக்கு 

santhya

தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியாவுக்கும் , அவரது கணவரும் இயக்குநருமான பாலகிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்துள்ளது.
இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தநிலையிலும் மனைவின் நடத்தையில் சந்தேகித்த பாலகிருஷ்ணன், அவருடன் பலமுறை வாக்குவாதம் செய்துள்ளார். இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதிளித்த பாலகிருஷ்ணன், தன்னோடு சேர்ந்துவாழவேண்டுமெனக் கூறியுள்ளார். இதனால் கடந்த 19-ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட பாலகிருஷ்ணன்  சுத்தியலால், சந்தியாவின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் சந்தியாவின் உடலை துண்டுதுண்டாக கூறுபோட்டு,  சாக்குப்பைகளில் கட்டி, அதனை வீட்டின் அருகேயே உள்ள குப்பை தொட்டிகளிலும், அடையாறு ஆற்றங்கரையோரமும் வீசியுள்ளார்.

கணவன் கைது 

sandhiya husband

இதையடுத்து ஜனவரி 21-ஆம் தேதி பெருங்குடி குப்பை கிடங்கில் கை,கால்கள் கண்டெடுக்கப்பட்டதால் கொலை சம்பவம்  குறித்த தகவல் வெளியுலகிற்குத் தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் பாலகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கிடைக்காத தலை?

sandhiya

சந்தியாவின் உடல்பாகங்களை ஒவ்வொன்றாக போலீசார் கண்டெடுத்து வந்த  நிலையில், இடுப்புக்கு மேல் பகுதியில் உள்ள பாகம் மற்றும் தலைப் பகுதியைக் காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கண்டு கண்டெடுக்கப்பட்ட உடல் உறுப்பு பாகங்கள் சந்தியாவின் உடல் பாகங்கள்தானா என்பதை உறுதி செய்வதற்கான மருத்துவ பரிசோதனை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்தது. 

 

sandhya

இதைத் தொடர்ந்து  சந்தியாவின் உடல் பாகங்கள் மூட்டையாக கட்டப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதி இறுதிச் சடங்கு  சொந்த ஊரான நாகர்கோவில் இன்று நடைபெறவுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: வைரலாகும் சிம்பு வீட்டு திருமண அழைப்பிதழ் : சோகத்தில் சிம்பு ரசிகர்கள்!?