சந்திப்பின் போது இருவரும் பேசிக் கொண்டது என்ன? ஸ்டாலின் ட்வீட்

 

சந்திப்பின் போது இருவரும் பேசிக் கொண்டது என்ன? ஸ்டாலின் ட்வீட்

மாநிலங்களின் உரிமைகளையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க சந்திரபாபு நாயுடுவோடு ஆலோசித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: மாநிலங்களின் உரிமைகளையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க சந்திரபாபு நாயுடுவோடு ஆலோசித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் இறங்கியுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரை நேற்று சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியிருந்தார்.

அதன் தொடர்ச்சியக திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார் சந்திரபாபு நாயுடு.

அதன்பின் கூட்டாக பேட்டியளித்த இருவரும், மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பாஜக ஆட்சியை அப்புறப்படுத்தவே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசியல் செல்ல வேண்டிய சரியான பாதை ‘மாநிலத்தில் சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி’ என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் வரையறுத்தார். பாசிச பாஜகவிடமிருந்து மாநிலங்களின் உரிமைகளையும்,அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நானும் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களும் கலந்தாலோசித்துள்ளோம்.” என பதிவிட்டுள்ளார்.