சந்தர்ப்பவாதம் பற்றி முதல்வர் பேசலாமா? – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

 

சந்தர்ப்பவாதம் பற்றி முதல்வர் பேசலாமா? – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சந்தர்ப்பவாதம் பற்றி முதல்வர் பேசலாமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: சந்தர்ப்பவாதம் பற்றி முதல்வர் பேசலாமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக தமிழக முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

palanisamy

இதுகுறித்து அவர் பேசுகையில், “மக்களை பாதிக்கும் மிகப் பெரிய சுகாதார பேரிடர் பிரச்னையில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலில் ஒதுக்கி வைக்கப்பட்டார். அதற்கு பிறகு சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் முன்னிலைப்படுத்தப்பட்டார். தற்போது தலைமை செயலாளரை தனது செய்தி தொடர்பாளராக மாற்றி தமிழக முதல்வர் அரசியல் செய்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்டால் சந்தர்ப்பவாதம் என்று முதல்வர் கூறுகிறார். கேட்க வேண்டிய சந்தர்ப்பத்தில் தான் கேட்கிறேன். கொரோனா தொற்று பரவ தொடங்கியபோது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசிடம் திமுக வலியுறுத்தியது” என்றார்.