சத்துணவு மாவிலிருந்த புழு: பதறும் தாய்மார்கள்..!

 

சத்துணவு மாவிலிருந்த புழு: பதறும் தாய்மார்கள்..!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைத்து அங்கன்வாடி மையங்களுக்கும்  சேர்த்து சுமார் 215 டன் மாவு விநியோகிக்கப் படுகிறது. 

குழந்தைகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்காக அங்கன்வாடி மையங்களில் மாதம் ஒரு பாக்கெட் வீதம் சத்துணவு மாவு வழங்கப்படும். இதனை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்மார்கள் கொடுப்பர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைத்து அங்கன்வாடி மையங்களுக்கும்  சேர்த்து சுமார் 215 டன் மாவு விநியோகிக்கப் படுகிறது. 

Anganwadi

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும்  வழக்கம் போலக் கர்ப்பிணிப் பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் சத்துணவு மாவை தாய்மார்கள் வாங்கியுள்ளனர். அப்போது அந்த சத்துணவு பாக்கெட்டுகளில் புழு மற்றும் வண்டு இருந்தது தெரிய வந்தது. அதை வாங்கிய மக்கள், அந்த பாக்கெட்டின் காலாவதியான நாட்களைப் பார்க்கையில் அதில் ஜூலை மாதம் முதல் அக்டோபர் உபயோகிக்கலாம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அதனையடுத்து, காலாவதியான சத்துணவு பாக்கெட்டுகளை வழங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் அனைவரும் புகார் ஏதும் அளிக்காமல்  அங்கன்வாடி மையங்களிலேயே அந்த பாக்கெட்டுகளை திருப்பிக் கொடுத்துள்ளனர். 

Insects

காலாவதியான பொருட்கள் அங்கன்வாடி மையங்களில் விநியோகப் படுவது குறித்துப் பேசிய, விருதுநகர் மாவட்ட சமூக நலத்துத்துறை அதிகாரி ராஜம், இதுவரை மக்கள் யாரும் இது குறித்து புகார் ஏதும் அளிக்கவில்லை. மக்கள் புகார் அளித்தால் அலட்சியப்போக்குடன் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து அங்கன்வாடிகளுக்கும் புதிய சத்துணவு பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.