சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

 

சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்துணவுப் பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க தயாரில்லாத அரசின் அலட்சியத்தால் போராட்டம் தீவிரமாகி வருகிறது.

கடந்த 29.10.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அரசு தரப்பில் “நிதியில்லை” என்று கைவிரித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது பணியாளர் நலன் பேணும் அணுகுமுறை அல்ல என்பதை சுட்டிகாட்டுகிறோம்.

ஏழைக் குழந்தைகளின் கல்விநலன் மற்றம் உடல் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கிய சத்துணைவுத் திட்டத்தை, எடப்பாடி திரு.கே.பழனிசாமி அரசு முடக்கி, மூடுவிழா நடத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

 35 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவுப் பணியாளர்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்த கருப்பு உடை அணிந்து போராடி வருகிறார்கள். இவர்களது போராட்டத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது என கூறியுள்ளார்.