சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

 

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி இன்று பிற்பகல் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி இன்று பிற்பகல் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி இன்று பிற்பகல் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 74 வயதான ஜோகிக்கு மதியம் 12:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் மாரடைப்பால் சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

ttn

மருத்துவமனை தரப்பில் வெளியான தகவல்படி, அஜித் ஜோகி வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார். ஜோகிக்கு இன்று காலையில் இருந்து ஒரு வழக்கமான நாளாகவே அமைந்திருந்தது. ஆனால் மாரடைப்புக்கு பிறகு அவர் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார். அதனால் அவரது நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

இவரது மனைவி ரேணு ஜோகி, எம்.எல்.ஏ, மகன் அமித் ஆகியோர் அவருடன் மருத்துவமனையில் உள்ளனர். ஒரு அதிகாரத்துவ அரசியல்வாதியான அஜித் ஜோகி சத்தீஸ்கரின் முதல் முதலமைச்சராக நவம்பர் 2000 முதல் 2003 நவம்பர் வரை அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.