சத்தீஸ்கர் மாநில முதல்வராக பதவியேற்றார் பூபேஷ் பாகல்!

 

சத்தீஸ்கர் மாநில முதல்வராக பதவியேற்றார் பூபேஷ் பாகல்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. 

அதன்படி, சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பூபேஷ் பாகலுக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்திபெண் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதேபோல், டி.எஸ்.சிங் டியோ, தம்ரத்வாஜ் சாஹு உள்ளிட்ட அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.