சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்; 5 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயம்!

 

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்; 5 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த சிஆர்பிஎஃப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற பாதுகாப்பு படையினர், அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த சண்டையின் இடையே, நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் பாதுகாப்புப் படையினர் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை தொடர்ந்து, வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தில் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.