சத்தான காய்கறி கொழுக்கட்டை எப்படி செய்வது?

சத்தான காய்கறி கொழுக்கட்டை எப்படி செய்வது?

காய்கறிகள் உடலுக்கு எப்போதும்  ஆரோக்கியமானது. ஒவ்வொரு காய்கறியிலும் நமக்கு தேவையான புரதசத்துக்களும், நீர்சத்துக்களும் உள்ளன. அப்படிபட்ட காய்கறிகளில்  ஒரு சுவையான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸான காய்கறி கொழுக்கட்டையை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க!

 தேவையான பொருட்கள் 

இட்லி அரிசி – 400 கிராம் 

கேரட்  -100 கிராம் 

தேங்காய் பூ – 100 கிராம் 

பெரிய வெங்காயம் – 1 

பச்சை மிளகாய் – 4 

பெருங்காயத்தூள் –  அரை டீஸ்பூன் 

சீரகம் – ஒரு டீஸ்பூன் 

கறிவேப்பிலை – தேவையான அளவு 

எண்ணெய் – 2 டீஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு

செய்முறை 

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து நைஸாக ஆட்டவும்.  மூன்று டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து மாவில் ஊற்றி,  தேங்காய், எண்ணெய் ஊற்றி மாவு கெட்டியாக வரும்போது சிறிது சிறிதாக நறுக்கிய மிளகாய் கேரட் சேர்த்து கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு இறக்கிவைக்கவும்.

kozhukatai

பின்பு இதை ஆற வைத்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்தால் காய்கறி கொழுக்கட்டை தயார். இதை தக்காளி சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டால், கூடுதல் சுவையாக இருக்கும். என்ன மக்களே இப்போவே நாக்கில் எச்சில் ஊறுகிறதா?

இதையும் படிங்க: புளி ரொட்டி..! புதுசா இருக்கா…? அட்டகாசமாகவும் இருக்கும்!