சத்தமே இல்லாமல் நிச்சயத்தார்த்தம் முடித்த வேதாளம் பட வில்லன் 

 

சத்தமே இல்லாமல் நிச்சயத்தார்த்தம் முடித்த வேதாளம் பட வில்லன் 

தெலுங்கில் முன்னணி வில்லனாக நடித்து வருபவர் நடிகர் கபீர் சிங்க்.

தெலுங்கில் முன்னணி வில்லனாக நடித்து வருபவர் நடிகர் கபீர் சிங்க். இவர் தமிழ், இந்தி போன்ற மொழி படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். தமிழில் இவர் அஜீத்தின் ’வேதாளம்’, விஜய் சேதுபதியின் ’றெக்க’, ’மெஹந்தி சர்க்கஸ்’, ’காஞ்சனா 3’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.  

இந்த நிலையில் இவரும், இந்தி பட பின்னணி பாடகி டோலி சிந்துவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். தற்போது அவர்கள் காதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாகச் சமீபத்தில் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் மிக முக்கிய நண்பர்கள் வட்டாரம் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

kabir singh

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். மேலும் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.