சத்தமே இல்லாமல் உதவி செய்த ‘தல’அஜித்! பிரபல நடிகரின் மகனை 10 வகுப்பு வரை படிக்கவைத்தாராம்!!

 

சத்தமே இல்லாமல் உதவி செய்த ‘தல’அஜித்! பிரபல நடிகரின் மகனை 10 வகுப்பு வரை படிக்கவைத்தாராம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் அஜித். எந்தவொரு ஆடம்பரத்தை விரும்பாத தல அஜித், விருது விழாக்களில் கலந்துகொள்வதில்லை. மேலும் தல அஜித் உதவி என்பதை பிறருக்கு தெரியாமல் செய்பவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் அஜித். எந்தவொரு ஆடம்பரத்தை விரும்பாத தல அஜித், விருது விழாக்களில் கலந்துகொள்வதில்லை. மேலும் தல அஜித் உதவி என்பதை பிறருக்கு தெரியாமல் செய்பவர். அதிலும் செய்த உதவியை வாங்கியவர் தவிர பிறர் அறியாமலும் பார்த்து கொள்வார். இதனால் கூட இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம் என சொல்லலாம். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் கூட அஜித்க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது வினோத் இயக்கத்தில் வலிமைப்படத்தில் நடித்துவரும் அஜித், அண்மையில்கூட கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 3 கோடி கொடுத்தார். 

மாரிமுத்து

இந்தநிலையில் பிரபல துணை நடிகர் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டில் ஒன்றில், “நானும் அஜித்தும் நீண்ட நாள் நண்பர்கள். அஜித் உண்மையில் மிகவும் நல்லவர். என் பையனை 10 ஆம் வகுப்பு வரை அவர்தான் படிக்க வைத்தார். அந்த நன்றியை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன். உதவி என்று யார் வந்து கேட்டாலும், கணக்குபார்க்காமல் உதவி செய்வார். அந்த நல்ல மனசுதான் இன்று அவரை இவ்வளவு பெரிய இடத்தில் உக்கார வைத்துள்ளது” என தெரிவித்தார்.