சதுரங்க வேட்டை பாணியில் வியாபாரம் செய்யும் நிறுவனம்… ஜி.எஸ்.டி சரியாக கட்டினார்களா என்று கணக்கு பார்க்கும் அரசு!

சதுரங்க வேட்டை பாணியில் வியாபாரம் செய்யும் நிறுவனம்… ஜி.எஸ்.டி சரியாக கட்டினார்களா என்று கணக்கு பார்க்கும் அரசு!

திருச்சியில் சதுரங்க வேட்டை பாணியில் எம்.எல்.எம் முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யாமல், ஜி.எஸ்.டி சரியாக கட்டியுள்ளார்களா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மன்னார்புரத்தில் எல்ஃபின் என்ற எம்.எல்.எம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தங்களுக்கு கீழ் உறுப்பினர்களை சேர்த்துவிட்டால் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு எல்லாம் கமிஷன் கிடைக்கும் என்று ஆசைகாட்டி பலரையும் உறுப்பினராக சேர்த்து வருகிறது இந்த நிறுவனம். இவர்கள் நிறுவனம் மூலம் மளிகைப் பொருட்கள் முதல் ஜவுளி, ரியல் எஸ்டேட் வரை பல தொழில்கள் நடந்து வருகிறது. ஆயிரக் கணக்கானோர் இவர்களின் ஆசை வார்த்தையை நம்பி இதில் முதலீடு செய்துள்ளனர்.

elfin-mlm

இந்த நிறுவனத்தை ராஜா, ரமேஷ் குமார் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வர்த்தகப் பிரிவு நிர்வாகிகளாகவும் உள்ளதால் இவர்களிடம் கேள்வி கேட்க பலரும் அஞ்சுகின்றனர். பல முறைகேடு நடப்பதாகவும் தொடக்கத்தில் கூறியது போல கமிஷன் தொகை வழங்கப்படவில்லை என்றும், டெபாசிட் தொகையை கேட்டால் தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வரி ஏய்ப்பு தொடர்பான நிறைய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. விரைவில் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரக்கைவிடுத்துள்ளனர். இதனால், இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்படுமா, இதுவரை கட்டிய பணத்துக்கு என்ன வழி என்று தெரியாமல் உறுப்பினர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.