சதுரகிரி பயணம்: மூச்சுத்திணறல் ஏற்பட்டு நால்வர் பரிதாப பலி!

 

சதுரகிரி பயணம்: மூச்சுத்திணறல் ஏற்பட்டு  நால்வர் பரிதாப பலி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்

சதுரகிரி பயணம்: மூச்சுத்திணறல் ஏற்பட்டு  நால்வர் பரிதாப பலி!

விருதுநகர் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் நால்வர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலில் ஆடி அமாவாசை வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு விட்டு செல்வர். 

அந்த வகையில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் சங்கிலி பாறை, வழுக்கல் பாறை பகுதிகளைக் கடக்கப் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் மக்கள் விழுந்து விடாமல் இருக்க, போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர். கூட்ட நெரிசலால் மலையேற சுமார் இரண்டு மணிநேரம் ஆனது. 

sathura

இந்நிலையில் கோயிலுக்கு வந்திருந்த முருகேசன், ராஜசேகர், சுசீலா உள்பட நான்கு பேர் மூச்சு திணறியும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்தனர்.  இதில் முருகேசன் திருமங்கலம் அருகே உள்ள சித்தூரைச் சேர்ந்தவர் என்றும், சுசீலா நெல்லை பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்கள்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.