சதி நடக்காததால் சஞ்சலத்தில் எடப்பாடி… 30 ஐ நம்பி இருந்தவருக்கு ஆப்பு வைத்த அடிப்பொடிகள்..!

 

சதி நடக்காததால் சஞ்சலத்தில் எடப்பாடி… 30 ஐ நம்பி இருந்தவருக்கு ஆப்பு வைத்த அடிப்பொடிகள்..!

மக்களவை தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் எனத் தெரிய வந்துள்ளதால், 30 என நம்பி இருந்தேன்… இப்போது மொத்தமும் போகப்போகிறதே… என நொந்து நூடுல்ஸாகிக் கிடக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

எப்படியும் 30 தொகுதிகளில் வெற்றி என விருமாப்போடு இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது தான் முதல்முறையாக தோல்வி பயம் எட்டி பார்த்திருப்பதாக கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி

சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை டெல்லியில் பேசும்போது தேர்தல் முடிவுக்கு பிறகு நிலையான ஆட்சி அமையும் என பேசினார். அவர் பேசி 24 மணி நேரத்துக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி  தன் டிராக்கை திசை திருப்பி கட்சியை உடைக்க சதி நடக்கிறது என்று ஆவேசத்துடன் பேசி வருகிறார். இப்படி டிராக்கை மாற்றி பேசுவதற்கு  பின்னால் பெரிய சதி வேலை நடந்து இருப்பதாக கூறுகிறார்கள்.

அந்த சதி என்னவென்றால், ஒருவர் 250 கள்ள ஓட்டு போட்டால் அவர்களுக்கு கனிசமான பணம். ஒத்துழைக்கும் அதிகாரிகளுக்கு தனி கவனிப்பு. பூத் ஏஜென்ட்டுகளை திசை திருப்பியும், போலீசை வைத்து மிரட்டியும் பணிய வைப்பது தான் அஜெண்டா. மேலும், பழைய வழக்குகளை தூசு தட்டி எடுத்து அடுத்த தேர்தல்களில் போட்டியிட முடியாத படி செய்வோம்னு சொல்லி மிரட்ட மேலிடத்தில் இருந்து உத்தரவுகள் பறந்திருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி

இந்த விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கும் என எடப்பாடி நம்பியதால் எப்படியும் 30 தொகுதிகளில் வெற்றி. இடைத்தேர்தலிலும் டபுள் டிஜிட்டில் அடித்து தூக்கி ஆட்சியை காப்பாற்றி விடலாம் என பெரும் நம்பிக்கையோடு இருந்திருக்கிறார் எடப்பாடி. ஆனால் அப்படி எதுவும்  வாக்குச்சாவடிகளில் நடக்கவில்லை என்கிற தகவல்  ஒவ்வொன்றாக இப்போதுதான் எடப்பாடிக்கு தெரிய வந்திருக்கிறது. அமைச்சர்கள் செல்வாக்குள்ள தொகுதிகளில் கூட அப்படி எதுவும் நடக்கவில்லை. பலரும் நமக்கேன் வம்பு என ஒதுங்கிக் கொண்டுள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி

இதனால் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மக்களவை தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் எனத் தெரிய வந்துள்ளதால், 30 என நம்பி இருந்தேன்… இப்போது மொத்தமும்  போகப்போகிறதே… என நொந்து நூடுல்ஸாகிக் கிடக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.