சதாம்பாய் கடை : ரோட்டோரக் கடையில் இத்தனை வெரைட்டியா?

 

சதாம்பாய் கடை : ரோட்டோரக் கடையில் இத்தனை வெரைட்டியா?

அநேகமாக சென்னையிலேயே அதிக நான்வெஜ் ஐட்டங்கள் தருகிற கடை இதுவாகத்தான் இருக்க முடியும் . ஆடு,கோழி,மீன்,காடை,என்று கிட்டத்தட்ட ஏகப்பட்ட  கறி வகைகள் இங்கே கிடைக்கின்றன.

சென்னை பாண்டிபஜாரின் முனையில் இருக்கும் முத்துக்கிருஷ்ணன் தெருவில் ( பார்த்தசாரதி புரம்) இருக்கிறது சதாம் பாயின் இந்த பரபரப்பான கடை.மாலை ஆறுமணிக்குத் துவங்கினால் இரவு ஒருமணி வரை பரபரப்பாக இயங்குகிறது.

அநேகமாக சென்னையிலேயே அதிக நான்வெஜ் ஐட்டங்கள் தருகிற கடை இதுவாகத்தான் இருக்க முடியும் . ஆடு,கோழி,மீன்,காடை,என்று கிட்டத்தட்ட ஏகப்பட்ட  கறி வகைகள் இங்கே கிடைக்கின்றன.

food

சென்னை பாண்டிபஜாரின் முனையில் இருக்கும் முத்துக்கிருஷ்ணன் தெருவில் ( பார்த்தசாரதி புரம்) இருக்கிறது சதாம் பாயின் இந்த பரபரப்பான கடை.மாலை ஆறுமணிக்குத் துவங்கினால் இரவு ஒருமணி வரை பரபரப்பாக இயங்குகிறது.சென்னையில் இரவு நேர சாலையோர கடைகளில் பெரும்பாலும்,சிக்கன் முட்டை இரண்டுதான் இருக்கும். ஆனால்,இங்கே,நண்டு,மூளை ரோஸ்ட்,ஆட்டு ஈரல்,பிச்சுப்போட்ட கோழி,பிச்சுப்போட்ட லெக்பீஸ்,மட்டன் சுக்கா,தலைக்கறி, போட்டி ஃபிரை,போட்டிக் குழம்பு,பாயா,தலைக்கறி, சிக்கன் வறுவல்,மீன்,காடை என்று 15 க்கு மேற்பட்ட ஐட்டங்கள் சூடாகக் காத்திருக்கின்றன

food

புரோடா,இட்லி,இடியாப்பம் இவற்றுடன் விதவிதமான தோசைகளும் உண்டு.
இட்லி பாயா,இடியாப்பம் பாயா,புரோட்டா பாயா என்று பலவிதமான பக்கவாத்தியங்களுடன் பாயா முன்னிலையில் இருந்தாலும்,பிச்சுப்போட்ட கோழியும் காடையும் கூடக் கொடிகட்டிப் பறக்கின்றன.

food

விலையும் அதிகம் இல்லை,எந்த கறியும் 50 ரூபாயை தாண்டாத விலையில் கிடைக்கின்றன.இட்லி 5 ரூபாய்,புரோட்டா 8 ரூபாய் என்று விலைவைத்து இருக்கிறார்கள்.எந்தக் கறியை நீங்கள் ஆர்டர் செய்தாலும்,அதை தோசைக்கல்லில் போட்டு வதக்கி சூடாகத் தருகிறார்கள். இட்லியை விட தோசை விரும்பிகள் சிக்கன் சாப்ஸ் அல்லது மட்டன் லிவரை தேர்ந்தெடுக்கிறார்கள்.இவைதவிர வழக்கமான கலக்கி, ஆம்லெட், ஆப்பாயில்,முட்டை தோசையும்கூட கிடைக்கின்றன. தப்பித்தவறி உங்களோடு யாராவது வெஜிடேரியன் வந்துவிட்டாலும் கவலைப்பட வேண்டாம்,சாம்பாருடன் இரண்டு வகைச் சட்டினியும் உண்டு.

food

நூறடிக்கு ஒரு தள்ளுவண்டிக் கடை இருக்கும் தியாகராயநகரில் இங்கேமட்டும்,சராசரியாக ஒரு இரவில் 1500 புரோட்டா விற்பனையாகிறது.இரண்டு அண்டா மாவும்,15 ட்ரே முட்டைகளும் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள்.இதை விடவா சதாம் பாய் கடையின் சுவைக்கு வேறு சான்று வேண்டும்.