சண்டை வேண்டாம்…மண்டை பத்ரம்…ஈபிஎஸ்., ஓபிஎஸ்க்கு கேங் லீடர் மோடி அட்வைஸ்…

 

சண்டை வேண்டாம்…மண்டை பத்ரம்…ஈபிஎஸ்., ஓபிஎஸ்க்கு கேங் லீடர் மோடி அட்வைஸ்…

’ஒற்றைத் தலைமைப் பஞ்சாயத்து தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் தேவையில்லாத தகராறுகளில் ஈடுபட்டு ஆட்சியைப் பறிகொடுக்கும் நிலைக்கு வந்துவிடாதீர்கள்’என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையுமே அவர்களது கேங் லீடர் மோடி கடுமையாக எச்சரித்திருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

’ஒற்றைத் தலைமைப் பஞ்சாயத்து தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் தேவையில்லாத தகராறுகளில் ஈடுபட்டு ஆட்சியைப் பறிகொடுக்கும் நிலைக்கு வந்துவிடாதீர்கள்’என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையுமே அவர்களது கேங் லீடர் மோடி கடுமையாக எச்சரித்திருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

eps and ops

இன்று நடைபெறும் கூட்டத்திற்காக நேற்றே பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் சென்னைக்கு வந்துவிட்டார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் கண்டிப்பாக செல்போன் எடுத்துவரக் கூடாது என்று தனித்தனியாக அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமைப் பற்றி பேச வேண்டும் என்று குறிப்பிட்ட சில மாசெ.க்கள் உறுதியாக இருக்கிறார்கள். தேர்தல் தோல்விக்கான காரணமே வலிமையான ஒற்றைத் தலைமை இல்லாததுதான் என்ற கருத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக இதுபற்றித்தான் பேசக் காத்திருக்கிறார்கள்.

eps and ops

இன்னும் சிலரோ ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான கே.சி. பழனிசாமிஇன்று நடக்க இருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள கடுமையாக முயற்சித்து வருகிறார். பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வரும் கே.சி. பழனிசாமி, சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வந்து அதிமுகவில் தான் சேர்ந்துவிட்டதாக அறிவித்தார். ஆனால் இன்றுவரை அவர் முறைப்படி அதிமுகவில் இணைந்ததற்கான தகவல் இல்லை. கே.சி.பழனிசாமி கூட்டத்துக்கு வந்தால் தங்கள் இருவருக்கு எதிராகவும் பேசுவார் என்பதால் அவரை அனுமதிக்கக் கூடாது என்பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருமே தெளிவாக இருக்கிறார்கள்.

eps and ops

இன்று  நடக்கும் கூட்டத்தில் அதிக ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா, ஓ.பன்னீருக்கு இருக்கிறதா என்றால் எடப்பாடிக்குதான் என்கிறார்கள் தலைமைக் கழக நிர்வாகிகள். ஓபிஎஸ் சின் உறுதியான ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமி கூட  ஓ.பன்னீரின் ஒற்றைத் தலைமையை வற்புறுத்தி பேசுவாரா என்பதே கேள்விக்குறிதான் என்கிறார்கள். இந்த நிலையில் கூட்டத்தில் யார் யார் பேசவேண்டும் என்பதுவரை முடிவு செய்துவிட்ட எடப்பாடி பழனிசாமி அதே நேரம் டெல்லியில் இருக்கும் தங்கமணி, வேலுமணியோடும் பேசியிருக்கிறார். எடப்பாடியின் நம்பிக்கைக்கு உரிய இருவரும் நேற்று பியூஷ் கோயல்,நேற்று  அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள். அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் தற்போது எடப்பாடிக்கே செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்பதை அமித் ஷாவிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்ட அமித் ஷா, ‘இப்போதைக்கு பிரச்சினை எதுவும் வேணாம் பாத்துக்கங்க’ என்று சொல்லியிருக்கிறார். இதை டெல்லியில் இருந்தபடியே எடப்பாடியிடம் தெரிவித்துவிட்டார்கள் தங்கமணியும், வேலுமணியும்.‘ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் வெடித்தால் அது உள்ளாட்சித் தேர்தலில் கட்சியைதான் பாதிக்கும். ஏற்கனவே பெரும்பாலான நிர்வாகிகள் நம் பக்கம் இருக்கும்போது இன்னும் பக்காவாக தயார் ஆகி பொதுக்குழுவில் நேரடியாக நமது ஆதரவை நிரூபிச்சுக்கலாம். இந்தக் கூட்டத்துல பிரச்சினை ஆச்சுன்னா பன்னீர் தரப்பும் வேற மாதிரி மூவ் பண்ணவும் வாய்ப்பிருக்கு. அதனால  கூட்டத்தை அமைதியா கடந்து போறதுதான் நல்லது’ என்று அவர்கள் எடப்பாடிக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

modi

இன்னொரு பக்கம் பிரதமர் மோடியும் இன்று நடைபெறும் கூட்டத்தில் சண்டை சச்சரவுகளுக்கு இடம் கொடுக்காமல் இன்னும் கொஞ்ச காலத்துக்கு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளப் பாருங்கள். உங்கள் இருவரையும் விட சசிகலா தலைமைப்பொறுப்புக்கு வருவதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்’என்பதையும் போட்டு உடைத்து இருவரையும் எச்சரித்திருக்கிறார்.