சண்டையில மட்டுமில்ல; தானத்திலும் இந்த நடிகர் அதிரடி-மக்களுக்காக ரூ.4000 கோடி

 

சண்டையில மட்டுமில்ல; தானத்திலும் இந்த நடிகர் அதிரடி-மக்களுக்காக ரூ.4000 கோடி

‘க்ரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்’ எனப்படும் புகழ்பெற்ற மெகாஹிட் ஹாலிவுட் படத்தின் கதாநாயகர் அதிரடியாக தனது சொத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாயை மக்களுக்காக தானம் செய்துள்ளார்.

நியூயார்க்:க்ரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்எனப்படும் புகழ்பெற்ற மெகாஹிட் ஹாலிவுட் படத்தின் கதாநாயகர் அதிரடியாக தனது சொத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாயை மக்களுக்காக தானம் செய்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் சோ உன் ஃபேட். சீனாவைச் சேர்ந்தவர். 2000ஆம் ஆண்டில் வெளியானக்ரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்என்ற ஆங்கில படத்தில் கதாநாயகராக நடித்தார். இந்தப்படம்பாயும் புலி பதுங்கும் நாகம்என்ற டைட்டிலில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படம் மட்டுமல்லாமல் ஏராளமான குங்ஃபூ சண்டைப்படங்களில் எதிரிகளை அதிரடித்து ரசிகர்களின் இதயங்களை வென்றவர். இப்போது நிஜ வாழ்க்கையிலும் அதிரடியாக ஒரு காரியத்தை செய்துள்ளார். தன்னுடைய சொத்தில் 4000 கோடி ரூபாயை மக்களுக்கு தானமாக வழங்கி அதை உயிலாக எழுதி வைத்துள்ளார்.

crouchingtiger

கடந்த 2015ம் வருடம் வெளியான போர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். உலகில் அதிக சம்பளம் வாங்கும் 24வது மிகப்பெரிய நடிகர் சோ உன் ஃபேட்இவர் இறந்த பின் அந்த பணம் மக்களுக்கு சென்றுவிடும். என்ன சொல்கிறார் இதுகுறித்து சோ உன் ஃபேட் கூறியதாவது: இறந்த பின் நாம் நமது பணத்தை எங்கும் கொண்டு செல்ல முடியாது. நாம் இறந்த பின் நம்முடைய பொருட்கள் பிறருக்கு செல்ல வேண்டும். மேல் உலகத்தில் எங்கும் வங்கிகள் கிடையாது. திரைப்படத்தில் நடித்து நான் சம்பாதித்தது எனது ரசிகர்கள் தந்த ஆதரவுதான் காரணமாகும். எனவே எனது சொத்து மக்களிடம் சென்று சேர்வதே சரியானதுஎன்று கூறியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை சோ உன் ஃபேட் நெகிழ வைத்துள்ளார்.