சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் முதல் முறையாக சிம்பன்சிகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை

 

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் முதல் முறையாக சிம்பன்சிகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை முதல் முறையாக 4 சிம்பன்சிகள் மற்றும் 3 மார்மோசெட்டுகளை பறிமுதல் செய்துள்ளது.

கொல்கத்தாவில் மேற்கு வங்க வனத்துறை கொடுத்த புகாரின் அடிப்படையில், வனவிலங்கு கடத்தல்காரன் சுபிரதீப் குஹாவுக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து மொத்தம் ரூ.81 லட்சம் மதிப்பிலான 3 சிம்பன்சிகள் மற்றும் 4 மார்மோசெட்டுகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர். அமலாக்கத்துறை இதுவரை சொத்துக்கள் மற்றும் பணத்தைதான் பறிமுதல் செய்துள்ளது. ஆனால் பண மோசடி வழக்கில், சிம்பன்சி மற்றும் மார்மோசெட்டுகளை பறிமுதல் செய்து இருப்பது இதுதான் முதல் முறை.

மார்மோர்செட்

இது தொடர்பாக அமலாக்கத்துறை கூறியதாவது: சட்டத்துக்கு புறம்பாக தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை வைத்திருப்பதாக சுபிரதிப் குஹாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மேற்குவங்க வனத் துறை வழக்கு தொடர்ந்தது. மேலும் காவல் நிலையத்திலும் குஹாவுக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக பறவைகள் வனவிலங்கு அதிகாரிகளிமிருந்து பெற்றதாக போலி அனுமதி கடிதத்தை பயன்படுத்தி, சட்டவிரோதமாக பறவைகளை கொண்டு செல்ல போலியான ஆவணங்களை உண்மையானதாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதாக மோசடி வழக்கு  பதிவு செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், அமைப்பு சார்ந்த வனவிலங்கு கடத்தல் மோசடியில் குஹா ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. குஹா மிகவும் புத்திசாலியான குற்றவாளி மற்றும் சுங்க மற்றும் வன வாழ்வு சட்டங்களிலிருந்து தப்பித்து கொள்ள சுங்கத்துறை மற்றும் வன வாழ்வு அதிகாரிகளிடம் வேறுவேறு தகவல்களை கூறியுள்ளான். இவ்வாறு அமலாக்கத்துறை தெரிவித்தது.