சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது தர்பார்…அதிர்ச்சியில் படக்குழு!

 

சட்டவிரோதமாக இணையத்தில்  வெளியானது தர்பார்…அதிர்ச்சியில் படக்குழு!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  இன்று உலகமெங்கும் வெளியானது

தர்பார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களில் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  இன்று உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரஜினி போலீஸாக  நடித்துள்ள இப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ttn

இந்நிலையில் தர்பார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களில் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ttn

முன்னதாக லைகா நிறுவனம்  தர்பார் படத்தை  இணையத்தில் வெளியிட தடைகோரி வழக்கு தொடர்ந்திருந்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், தர்பார் திரைப்படத்தை 1370 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது கவனிக்கத்தக்கது.