சட்டமன்றத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது: மு.க.ஸ்டாலின்

 

சட்டமன்றத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது: மு.க.ஸ்டாலின்

மேகதாது அண விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: மேகதாது அண விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவையை கூட்ட தமிழக அரசு ஆளுநரிடம் அனுமதி கேட்டது. ஆளுநரும் அனுமதி அளித்திருப்பதால் நாளை மாலை மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. கஜா புயலால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கான நிதியை மத்திய அரசு அதிகமாக கொடுக்க வேண்டும் என்றார்.