சட்டப்பேரவையை அதிர வைத்த முதல்வரின் ஆவேச பேச்சு.. ஆடிப்போன திமுக : எடப்பாடியின் மறுபக்கம்!

 

சட்டப்பேரவையை அதிர வைத்த முதல்வரின் ஆவேச பேச்சு.. ஆடிப்போன திமுக : எடப்பாடியின் மறுபக்கம்!

38 எம்.பிக்களை வெச்சுட்டு நாடாளுமன்றத்துல என்ன பண்றீங்க. அங்க கேக்க வேண்டியது தான.. 18 வருஷமா அங்க இருந்து மக்களுக்காக என்ன செஞ்சீங்க

பொதுவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாந்தமான முகத்துடன் பேசுவதைத் தான் எல்லாரும் பார்த்திருப்போம். எவ்வளவு பெரிய விஷயம் நடந்தாலும் அதனைப் பெரிது படுத்தாமல் அமைதியாகவே பவ்யத்துடனே பேசுவார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாகச் சட்டசபையையே அதிர வைக்கும் படியான அவரின் பேச்சு திமுகவினரை அசர வைத்தது. எடப்பாடி இப்படியும் பேசுவாரா..? இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? என்று அதிமுக கட்சியினரே அவரை வியந்து பார்த்தனர். 

ttn

நேற்று முன் தினம் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாகக் கேள்வி எழுந்தது. அப்போது, ” சிஏஏவால் யாராவது ஒருத்தர் பாதிக்கப் பட்டிருந்தாலும் சொல்லுங்கள். அதற்கு நான் பதில் சொல்கிறேன். இப்படிச் சொல்கிற உங்களால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்ட முடியுமா.. நீங்கள் தான் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறீர்கள்.. உங்களைப் போல நடிப்பவர்கள் நாங்க இல்ல” என்று முதல்வர் ஆவேசமாக சீறி பாய்ந்தார். முதல்வரின் இந்த பதில் திமுகவினரை வாயடைக்கச் செய்தது. அவரின் இந்த பேச்சு இணையதளத்தில் வேகமாகச் சரமாரியாக கமெண்ட்டுகள் வந்தது.

ttn

 

குறிப்பாக, “அவரு என்ன கொட்டைய மாட்டிகிட்டு கும்பிடு போட்ற பழனிசாமின்னு நெனச்சியா.. சீறிப்பாயுற நரசிம்மன் டா” போன்ற பதிவுகள் குவிந்தன. அதனைத் தொடர்ந்து நேற்று வேளாண் மண்டலம் தொடர்பாக கேள்வி எழுந்தது. அதுக்கு விடுவாரா நம்ம எடப்பாடி. ” 38 எம்.பிக்களை வெச்சுட்டு நாடாளுமன்றத்துல என்ன பண்றீங்க. அங்க கேக்க வேண்டியது தான.. 18 வருஷமா அங்க இருந்து மக்களுக்காக என்ன செஞ்சீங்க” என்று கேள்வி கேட்டே திமுகவை வறுத்தெடுத்து விட்டார். 

ttn

இதற்கு இணைய தளத்தில் ஒருவர் எடப்பாடியை எம்.ஜி.ஆர் படத்துடன் ஒப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டிருந்தார். அதாவது அவர், எங்க வீட்டு பிள்ளை படத்துல வரும் எம்.ஜி.ஆர் மாதிரி.. முதல்ல பம்முவாரு.. அப்புறம் பாய்வாரு.. நீங்க இப்போ பாக்குறது ரெண்டாவது எம்.ஜி.ஆர” என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதன் பின்னர் 7 பேர் விடுதலை தொடர்பாக எழுந்த கேள்விக்கு.. எல்லாத்துக்கும் என்கிட்ட பதில் இருக்கு என்பது போல பதிலுக்கு பதில் பேசினார். அப்போது, “உங்களை போல தான் நாங்களும் ஆளுநரின் பதிலுக்காக காத்திருக்கோம். எங்களால் முடிந்த எல்லா விஷயத்தையும் செய்தாகிவிட்டது” என்று கூறினார். மேலும், வேளாண் மண்டலம் குறித்த கேள்விக்கும் திமுகவுக்கு பதிலடி கொடுத்தார். இவ்வாறு கடந்த இரண்டு நாட்களாக முதல்வரின் பேச்சு திமுகவினரை திக்குமுக்காட செய்தது. 

இதன் பின்னர், உலகமாக்களுக்கு ஊதியத்தொகை உயர்வு, ஹஜ் யாத்திரை செல்பவர்கள் தங்குவதற்கு வீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வரின் பேச்சு அதிமுக அமைச்சர்களை வியப்பில் ஆழ்த்தி கை தட்டிய படியே நடவடிக்கைகளைப் பார்த்து வந்தார்கள். இன்னும் சில அமைச்சர்களோ “புலி பதுங்கி இருந்தது பாயுறதுக்கு தான் போல” என்று பேசிக் கொண்டார்கள்.