சட்டப்பேரவையில் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை! இ.பி.எஸ்-க்கு நடத்தப்பட்டதா என்று கேள்வி!

 

சட்டப்பேரவையில் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை! இ.பி.எஸ்-க்கு நடத்தப்பட்டதா என்று கேள்வி!

நாடு முழுவதும் கொரோனா பீதி உச்சத்தில் இருக்கும் நிலையில், இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவை வந்தனர்.

இன்று சட்டப்பேரவைக்கு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் கொரோனா பீதி உச்சத்தில் இருக்கும் நிலையில், இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவை வந்தனர். அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கியம்தான். ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பரிசோதனை என்பது ஏற்புடையது இல்லை. சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு முதலில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.